நான் பிறந்து 23 வருடங்கள் ஆன நாள். சில எதிர்பாராத வாழ்த்துக்கள் வந்தாலும் எதிர் பார்த்த சில வாழ்த்துகள் வர வில்லை என்பதில் எனக்கு சிறிது வருத்தமே.
தன் பிறந்த தினத்தை விமர்சையாக கொண்டாடாத பல பேர்களில் நானும் ஒருவன். அதற்காக புது dress கூட இல்லாமலா ? வாங்கினேன் . முதல் முறையாக நான் வாங்கிய துணிகளில் கருப்பு நிறம் இல்லை. எனக்கே ஆச்சரியம், கருப்பு வாங்க கூடாதென்று செல்லவில்லை, இருந்தாலும் இம்முறை கருப்பு இல்லை. அதற்கு பதில் வெள்ளை. நான் ரொம்ப நாட்களாக வாங்க எண்ணிய ஒரு T shirt அன்று என் கண்ணில் தென்பட்டது, என் நண்பன் நாகராஜ் கண்களில் தான் முதலில் தென்பட்டது. வாங்கினேன். ஆனால் அதை பிறந்த நாள் அன்று அணியவில்லை, முன் பதிவுகளில் சொன்னது போல் , என் பிறவி குணமே அதற்கு காரணம்.(பிறர் என்ன நினைப்பரோ) இக்குணத்தின் பயன்களை என்று முழுமையாக அனுபவிக்க போகிறேனோ தெரியவில்லை.
அன்றைய நாள் எந்த வித ஆர்பரிப்பும் இன்றி இனிதே முடிந்தது. இரவு வரை காத்திருந்தேன், எதிர்பார்த்த வாழ்த்து வரவில்லை,
நாம் ஒருவரது பிறந்த நாளைக்கு வாழ்த்தினால், அவர் நம் பிறந்த நாளைக்கு வாழ்த்த வேண்டும் என்று சட்டமா என்ன? ஹ்ம்ம் அப்படி ஒரு சட்டம் இருந்தால் கூட நல்லா தான் இருக்கும்..........
இந்த தணியாத தாகம், என்று தணியுமோ?