Friday, 3 August 2012

தமிழும் அவளும்



உண்மையில் நீயும் என் தாய்த்தமிழ் தானடி
உன் உயிரை என் மெய்யில் கலந்ததால் !

காதலிக்கும் காரணத்தாலேயே
கவிஞன் ஆகிறோம் !
தமிழின் பால் கொண்ட காதலாலும்
எதிரினப்பாலின் மேல் கொண்ட காதலாலும்

Friday, 24 February 2012

காற்று வரும்

கண்ணாடிகள் இறக்கப்பட்டபோது வரவில்லை,
கண ரக வாகனகள் கடந்தபோது தெரியவில்லை,
கடற்கரையோரம்  சென்ற போது அடிக்கவில்லை,
தென்றலை உணர்ந்தேன்,
அவள் கருங்கூந்தல் அசைந்தபோழுது........

முன் இருக்கையில் அவள்..... 


Monday, 13 February 2012

சொல்வாயோ ?

செல்ல வேண்டாம் கடற்கரை- சேர்ந்து
காண வேண்டாம் பெரியதிரை
ஒரே ஒரு முறை
காதல் என்று உரை...... இந்த உடல்
தீக்கு இரையாகும் வரை
நான் உன்னுள் சிறை...........

Saturday, 14 January 2012

சொல்லாமலே

பூவின் அனுமதியின்றி
தேனை ருசிக்க இயலாது
வண்டால்...

அனுமதியின்றியே 
காதலிக்க தோன்றும்
உன்னை
கண்டால்....

Wednesday, 4 January 2012

Individuality

When you are bound to accept other's opinions, you start losing your individuality, just because to gain the so called name, "adjustable person".  Opinions differ from person to person.  Opinions does not differ in facts, most wont(infact will not try to) understand it. Majority is also not a factor to support opinion.  If an opinion has more number of supporters, it does not going to affect the opposite opinion.  "In my point of view" is opinion. Everyone has there own point to say or to like. Some may be same in opinions and some may not.
2+2=4, in this case, no one is going to deny or have difference of opinion in it, because this is a fact.  Opinion comes into picture, when we discuss something which cannot be judged as a fact. 

Whenever I review a movie, I review it as whether I like it or not. I never judge a movie as good or bad. This is applicable not only for an movie, for all things.  Opinion is an individual thought and should not be forced upon to accept.  I am not going to deny anyone's opinion and as I do so, I except the same from others. Do not make others to lose their individuality by making the person to accept your opinion, since it is yours or accepted by majority.  You can debate your opinion with the opponent if they has the opposite opinion, but dont force them to accept it.  In the debate, if the person gets convinced and accepts the other's opinion, its fair and good, else dont force it... As said earlier, there is no question of right or wrong here, its just the thought.........

If other's opinion is against yours, even you dont like it, dont hurt them by criticizing their opinions.. It really hurts...Why the hell you criticise my opinion, when I am not even bothered about yours? One who is not brave enough to respect(not accept) other's opinion is a real coward.....

Thursday, 29 December 2011

என் காதல் வித்தியாசமானது- படித்ததில் ரசித்தது


நான் காதலிப்பது
உன் உடலை அல்ல
உன் உயிரை
நான் விரும்புவது
உன் அழகை அல்ல
உன் மனதை
உன்னுடன் வாழ நான்
ஆசைப்படவில்லை
நீ வாழும் உலகில் வாழவே
ஆசைப்படுகிறேன் !
உருவமில்லா உன் மனதை கேட்டு
உருவமில்லா என் உயிர்
துடிக்கிறது உயிர்நாடியாய் !
தகப்பன் வீட்டில் நீ இருக்கும் போது
பிறந்த உன் மீதான என் காதல்
நீ கணவன் வீடு சென்றாலும்
உயிர் வாழும்
மனம் கொண்டு மனம் சேர்த்து
என் வாழ்வில் மணம் வீச செய்தவளே !
என் மன அரண்மனையின் மகாராணியே !
நீ வாழும் உலகில் வாழ்வதே
எனக்கு போதும் !
இப்போதாவது புரிந்துகொள்
என் காதல் வித்தியாசமானது !

Monday, 5 December 2011

இது சரியா?

மண்ணை படைத்தாய் சரி, 
என்னை படைத்தாய், சரி,
என் கண்ணை படைத்தாய், அதுவும் சரி, 
இவை அனைத்தையும் படைத்துவிட்டு,
பெண்ணையும் படைத்தாயே,
இறைவனே, ஏன்?