Thursday, 29 December 2011

என் காதல் வித்தியாசமானது- படித்ததில் ரசித்தது


நான் காதலிப்பது
உன் உடலை அல்ல
உன் உயிரை
நான் விரும்புவது
உன் அழகை அல்ல
உன் மனதை
உன்னுடன் வாழ நான்
ஆசைப்படவில்லை
நீ வாழும் உலகில் வாழவே
ஆசைப்படுகிறேன் !
உருவமில்லா உன் மனதை கேட்டு
உருவமில்லா என் உயிர்
துடிக்கிறது உயிர்நாடியாய் !
தகப்பன் வீட்டில் நீ இருக்கும் போது
பிறந்த உன் மீதான என் காதல்
நீ கணவன் வீடு சென்றாலும்
உயிர் வாழும்
மனம் கொண்டு மனம் சேர்த்து
என் வாழ்வில் மணம் வீச செய்தவளே !
என் மன அரண்மனையின் மகாராணியே !
நீ வாழும் உலகில் வாழ்வதே
எனக்கு போதும் !
இப்போதாவது புரிந்துகொள்
என் காதல் வித்தியாசமானது !

Monday, 5 December 2011

இது சரியா?

மண்ணை படைத்தாய் சரி, 
என்னை படைத்தாய், சரி,
என் கண்ணை படைத்தாய், அதுவும் சரி, 
இவை அனைத்தையும் படைத்துவிட்டு,
பெண்ணையும் படைத்தாயே,
இறைவனே, ஏன்?





Sunday, 4 December 2011

மயக்கம் என்ன - விமர்சனம்

மிகுந்த எதிர்பார்ப்புகளோடு சென்ற படம்..... மயக்கம் என்ன....  எதிர்பார்புகளை பூர்த்தி செயததேன்றே சொல்லலாம்...

கார்த்திக் சுவாமிநாதன்... புகைப்பட துறையில் சாதிக்க துடிக்கும் இளைஞன் ....
அவன் சந்திக்கும் இன்னல்களையும் அவன் வாழ்வின் சம்பவங்களையும் இவ்வளவு எதார்த்தமாக தந்ததற்கு செல்வராகவனுக்கு ஒரு சபாஷ்.....

கதாநாயகியை , தனுஷின் நண்பரின் காதலியாக முதலில் காட்டுவது புதிது....
கதாநாயகியாக ரிச்சா கங்கோபாத்யாய், புது முகமாம்... நம்ப இயலவில்லை... நல்ல வருங்காலம் இருக்கிறது  ரிச்சா.......

தான் எடுத்த புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியதற்காக, தனுஷ் நியாயம் கேட்கும் காட்சி, அருமை.....அந்த அழுகையில் , தனக்கு தேசிய விருது கொடுத்ததை , நியாய படுத்தி இருக்கிறார்.... நடிப்பில் நல்ல முதிர்ச்சி....
Wild life photographer ஆக ரவி பிரகாஷ், ஒரு சில காட்சிகளே வந்தாலும் , மக்களிடத்தில் நன்றாக வாங்கி கட்டி கொள்கிறார்...

நண்பர்களாக வரும் மூவரும், தத்தம் வேலைகளை மிக கச்சிதமாக செய்துள்ளனர்...அதிலும் சுந்தர் அதிகம் கைதட்டல் வாங்குகிறார்... இவர் உண்மையிலேயே ஒரு புகைப்பட கலைஞராம்....

ஒளிப்பதிவு, ராம்ஜியை கட்டி தழுவி பாராட்டலாம்....நளினம்,  நகரையும், காட்டையும் இவர் camera காட்டும் விதம் மிக தெளிவு...

"மனசுக்கு பிடிச்ச வேல செயலேன்னா செத்துருலாம் sir, " வசனங்கள் பளிச், செல்வா , கலக்குறீங்க....

பாடல்கள், ஏற்கனவே Hit.... தனுஷ் , குரலில் இரண்டு பாடல்கள், இளைஞர்களின்   latest தேசிய கீதம்...(Why this kolaveri di வருவதற்கு முன்)....
 பிறை தேடும் பாடல், மனதை வருடுகிறது... GV, மற்ற பெண் பாடகர்களுக்கும் chance கொடுங்க ....

இரண்டாம் பாதியில், திரைகதையில், சற்று தேக்கம் இருந்தாலும், மயக்கம் என்ன, தவிர்க்க தகாத படம்...

தனுஷ் -2
ரிச்சா - 1 
செல்வா - 1.5 
ராம்ஜி - 1.5
GV - 1
மற்ற நடிகர்கள் -1 

மொத்தத்தில், 8/10

Wednesday, 9 November 2011

அறை

தாயின் கருவறை 
என்னை குழந்தையாக ஏற்று கொண்டது
பள்ளி அறை
என்னை மாணவனாக ஏற்று கொண்டது 
உன் மன அறை மட்டும்
ஏன் என்னை காதலனாக ஏற்க மறுக்கின்றது ?
இப்படியே தொடர்ந்தால்,
பிண அறை 
என்னை சடலமாக ஏற்று கொள்ளும் ......


Tuesday, 8 November 2011

நவம்பர் 6

நான் பிறந்து 23 வருடங்கள் ஆன நாள். சில எதிர்பாராத வாழ்த்துக்கள் வந்தாலும் எதிர் பார்த்த சில வாழ்த்துகள் வர வில்லை என்பதில் எனக்கு சிறிது வருத்தமே. 
தன் பிறந்த தினத்தை விமர்சையாக கொண்டாடாத பல பேர்களில் நானும் ஒருவன்.  அதற்காக புது dress கூட இல்லாமலா ? வாங்கினேன் . முதல் முறையாக நான் வாங்கிய துணிகளில் கருப்பு நிறம் இல்லை. எனக்கே ஆச்சரியம், கருப்பு வாங்க கூடாதென்று செல்லவில்லை, இருந்தாலும் இம்முறை கருப்பு இல்லை. அதற்கு பதில் வெள்ளை. நான் ரொம்ப நாட்களாக வாங்க எண்ணிய ஒரு T shirt  அன்று என் கண்ணில் தென்பட்டது, என் நண்பன் நாகராஜ் கண்களில் தான் முதலில் தென்பட்டது. வாங்கினேன். ஆனால் அதை பிறந்த நாள் அன்று அணியவில்லை, முன் பதிவுகளில் சொன்னது போல் , என் பிறவி குணமே அதற்கு காரணம்.(பிறர் என்ன நினைப்பரோ) இக்குணத்தின் பயன்களை என்று முழுமையாக அனுபவிக்க போகிறேனோ தெரியவில்லை. 
அன்றைய நாள் எந்த வித ஆர்பரிப்பும் இன்றி இனிதே முடிந்தது. இரவு வரை காத்திருந்தேன், எதிர்பார்த்த வாழ்த்து வரவில்லை, 

நாம் ஒருவரது பிறந்த நாளைக்கு வாழ்த்தினால், அவர் நம் பிறந்த நாளைக்கு வாழ்த்த வேண்டும் என்று சட்டமா என்ன? ஹ்ம்ம் அப்படி ஒரு சட்டம் இருந்தால் கூட நல்லா தான் இருக்கும்..........

இந்த தணியாத தாகம், என்று தணியுமோ?

Friday, 28 October 2011

துணிவில்லை


நுகர்ந்ததில்லை அவள் கூந்தலை
உணர்ந்ததில்லை அவள் தீண்டலை
பிடித்ததில்லை அவள் கைகளை 
கேட்டதில்லை அவள் மொழிகளை
பார்த்ததும் இல்லை அவள் விழிகளை
இவை அனைத்தையும் செய்தாலும்
சொல்ல துணிவில்லை என் காதலை 



போராட்டம்

உன்னை காண்பதற்காக தவிக்கிறேன்
ஆனால் அதனை தவிர்க்கிறேன்
உன் வருகைக்காக பூக்களை விரிக்கிறேன்
விரித்த பூக்களை நானே எரிக்கிறேன்
என் காதலை சொல்ல நினைக்கிறேன்
பின்னர் அதனை சொல்ல மறுக்கிறேன்
எனக்குள் என்றும் சிரிக்கிறேன் 
என்னை எண்ணி வியக்கிறேன்!!!!!!

Sunday, 2 October 2011

சொல்லாத காதல் (படித்து ரசித்தது)


கால் நனைக்கும் அலைகளோடு
கடற்கரையில் கைகோர்த்து நடந்ததில்லை..
யாரும் இல்லாத தனிமையில்
நடுக்கத்தோடு உதடுகளை ஒட்டியதில்லை..
ஆள் இல்லா திரையரங்குகளில்
கார்னர் சீட்டில் கதை பேசியதில்லை...
புற நகர் பூங்கா நாற்காலிகளில்
மடியில் தலை வைத்து படுத்ததில்லை..
கூட்டமான பஸ் பயணங்களில்
குறுஞ்செய்தி அனுப்பி கொஞ்சிக்கொண்டதில்லை..
பேய் உறங்கும் வேளையிலும்,
போர்வைக்குள் போனை ஒளித்து
பேசியதில்லை..
செல்ல சண்டைகள் போட்டு பிரிந்து,
அடுத்த நாள் அனைத்தையும் மறந்து
தலை கோதியதில்லை..
பிப்ரவரி 14 க்கும்,
பிரிதொரு நாள் வரும் பிறந்த நாளுக்கும்,
பரிசுகள் வாங்க மெனக்கெட்டதில்லை..
உன் நினைவை சொல்லும்
கடிதங்களும் , காதல் பரிசுகளும்
இல்லை என்னிடம்..
நீ போகும் பாதையில் சிந்தி செல்லும்
புன்னகையையும், பூக்களையும்தான்
சேர்த்து வைத்து இருக்கிறேன்..
தெற்று பல் தெரிய சிரிக்கும்
உன் முகம் மட்டும்தான் நெஞ்சில்
இருக்கிறது ஞாபகார்த்தமாய்..
இருந்தாலும் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்..
சுகமாய்த்தான் இருக்கிறது இந்த தனிமையும்..
சொல்லாத காதலும் சொர்க்கம்தான்...
நீ எனக்கில்லை என சுடும் அந்த நொடிகளை தவிர..

Thursday, 15 September 2011

கனவு

அவள் எனது கனவுகளை
நினைத்து சிரிக்கிறாள்,
நானோ, அவள் சிரிப்பையே
கனவாக காண்கிறேன்

 

காதல்

ஒரு பெண்ணை சந்திக்கும் போதே
வருவது அல்ல காதல்,
அவளை பற்றி சிந்திக்கும்
போது தான்
வருகிறது

Sunday, 11 September 2011

இசை

இன்று இசை கல்லூரி விடுமுறையாம் 
அவளின் கால் கொலுசு தொலைந்ததற்காக 

Saturday, 10 September 2011

என் முதல் பகிர்வு

சிறிது நாட்களாகவே எனது blog ஐ ஆரம்பித்து என் எண்ணங்களை பகிர்ந்திட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.  அதற்கான தருணம்  தற்போது தான் வந்துள்ளதாக நினைக்கிறேன். 

என்னிடமிருந்து மாதத்திற்கு ஒரு கவிதையாவது எதிர்பார்க்கலாம்,
உங்களது ஆதரவை என்றும் எதிர்பார்க்கும்


பாலாஜி 

எப்பொழுதும் நீ

வெறுக்கிறேன்
வெறுப்பதை மறைக்கிறேன்
மறைக்கிறேன்
மறைப்பதை மறுக்கிறேன்
மறுக்கிறேன்
மறுத்ததை மறக்கிறேன்
மறக்கிறேன்
வெறுத்ததையே மறக்கிறேன்




நினைவுகள்


அவள் வந்த அந்த தினம்
மனம் முழுவதும் மணம்
என்னை பார்த்தாள் ஒரு கனம்
ஆனது உடனே மனம் கணம்
அப்பார்வைக்கு ஈடில்லை பணம்
என்றும் ஆறாது மனதின் ரணம்
அவளை விரும்ப வைத்தது குணம் - பின்
தயங்க வைத்தது அவள் சினம்
அவள் இல்லையெனில்
வாழ்கையோ ஒரு வனம்
நானோ ஒரு பிணம்